விவாகரத்து எல்லாம் கிடையாது... சந்தோஷமா இருக்கேன்... நடிகை அசின் விவகாரத்தில் ஷாக்கான கோலிவுட்!

 
அசின்

கண்ணாடி வீட்டிற்குள் கல்லெறிவதே சினிமா ரசிகர்களுக்கு வேலையா போச்சு என்று புலம்புகிறார்கள் திரையுலகினர். நெருப்பில்லாமலா புகையும்? இவங்க காதலிக்கலைன்னு சொல்றதும் அப்புறமா அந்த ஹீரோவையே கல்யாணம் பண்ணிக்கறதும் காலங்காலமா நடந்துக்கிட்டு தானே இருக்கு. அவ்வளவு ஏன்? அசின் தமிழ் சினிமாவுல உச்சத்துல இருக்கும் போது தான் நயன் - சிம்பு காதல் பத்திக்கிச்சு. ரெண்டு பேருமே இல்லைன்னு சொல்லிக்கிட்டு அப்ப நடிச்சிக்கிட்டு இருந்த எல்லா பட ஷூட்டிங்லேயுமே தயாரிப்பாளர் பணத்துல லவ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அப்புறமா காதல் தோல்வியில் தாடி வளர்க்க சிம்பு என்ன டி.ராஜேந்தரா?

அசின்

அடுத்த காதல்னு ஹன்சிகா கூட டூயட் பாடி, அந்த காதலும் பாதியில ஊத்திக்கிச்சு. இது இல்லாமல வரிசையா எத்தனையோ நடிகைகளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்னு வந்த நியூஸூம், அந்த காதலும் பாதியில நின்று போனதையும் ரசிகர்கள் கவனிச்சுக்கிட்டு தானே இருக்காங்க.

இந்நிலையில், தனது தொழிலதிபர் கணவருக்கும், அசினுக்கும் ஒத்து வரவில்லை என்றும், குழந்தையுடன் கேரளாவில் அப்பா வீட்டில் அசின் வசித்து வருவதாகவும் செய்திகள் வலம் வரத் துவங்கின.

அசின்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபர் ராகுல் சர்மா, அசினைத் திருமணம் செய்து கொண்ட பின்னரும், வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அசின் கண்டித்தும் கேட்காததால், அவரை விவாகரத்து செய்யும் முடிவில் இருப்பதாகவும் செய்திகள் றெக்கை கட்டி பறக்கிறது.

சும்மாவே நம்மாளுங்க ஆடுவாங்க. இப்போ மொத்த கோலிவுட்டுமே, எதுக்கும் நம்ம படத்துக்கு கால்ஷீட் கேட்டு வைப்போம்.. விவாகரத்தானா சமந்தா, அமலாபால் போல க்ளாமர்ல கலக்கலாம்னு கால்களில் சலங்கைக் கட்டிக் கொண்டு அசினுக்கு ஆறுதல் சொல்ல கிளம்பினார்கள். எம்.குமரன் பட ஸ்டைலில்... ஹைய்யோ... நான் இப்போ சந்தோஷமா தான் இருக்கேன். விவாகரத்தெல்லாம் கிடையாது... நடிக்கவும் வரலை... ஆளை விடுங்கடா சாமி என்று அசின் கையெடுத்து  கும்பிட்டதாக நெருக்கமான தயாரிப்பாளர் கூறினார். வட போச்சே என்று அசினுக்கு விவாகரத்து ஆகாமல் இருக்கும் வருத்தத்தில் இருக்கிறார்களாம். ஒரு பொண்ணு தப்பிச்சு போகட்டும் வாழ விடுங்கடா என்று புலம்பி தள்ளுகிறார் நம்மிடம் தகவலைச் சொன்ன தயாரிப்பாளர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web