தேமுதிக மாநாடு... கூட்டணியை அறிவிப்பாரா பிரேமலதா விஜயகாந்த்?! தொண்டர்கள் எதிர்பார்ப்பு!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் தே.மு.தி.க சார்பில் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” நடைபெற உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டில் பிரம்மாண்ட மேடை, முகப்பில் தேவாலயம், கோவில், பள்ளிவாசல் ஆகிய மும்மதங்களின் அடையாளங்கள் மற்றும் விஜயகாந்த் நடித்த படங்களின் கதாபாத்திரங்கள், சிலைகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் காக்கப்பட்டுள்ளன.
மாநாட்டை தொடங்கி வைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மேடையில் கொடிகம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி, பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய கலைக்குழு பாடல்கள் மூலம் விழாவை சிறப்பித்தார். மறைந்த நடிகர் விஜயகாந்தின் ஆவணப்படமும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தே.மு.தி.க எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்பது குறித்த அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் சிறப்புரையில் அறிவிக்க உள்ளார். இதனால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகம் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
