தேமுதிகவுக்கு கிடையாது... அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு!

 
அதிமுக மாநிலங்களவை
திமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இன்று அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.6.2025 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக இன்பதுரை(அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்), தனபால் (முன்னாள் எம்எல்ஏ, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்
மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடரும் என்றும் 2026-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி

அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவாா்த்தையின் போது, தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கொடுப்பதாக பேசப்பட்ட நிலையில், தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது