ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக பிரம்மாண்ட மாநாடு... பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு!

 
தேமுதிக
 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாகத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இந்தச் சூழலில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகமும் (தேமுதிக) தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, வருகிற 2026 ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது, அந்தக் கடலூர் மாநாட்டிற்குத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விடியோ ஒன்றை வெளியிட்டு, கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில், "தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும், ஒன்றியம், நகர, கிளைக் கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணிச் சகோதரிகளுக்கும், சார்பு அணி நிர்வாகிகளுக்கும், தலைவரை உயிர் மூச்சாய்க் கொண்டுள்ள அனைத்துத் தொண்டர்களுக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வருகிற ஜனவரி 9, 2026 அன்று 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' கடலூரிலே பாசார் கிராமத்தில் நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டை மிக பிரம்மாண்டமான வெற்றி மாநாடாக அமைத்துத் தர வேண்டும். அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்" என்று அவர் உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இறுதியாக, "நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்" என்ற முழக்கத்துடன் அவர் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!