திமுக கூட்டணியில் 8 மாதத்தில் விரிசல் ...முதல்வர் தனியா தான் நிக்கணும் ... அண்ணாமலை ஆருடம்.!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி பற்றி பேசினார். அப்போது, ” திமுக கூட்டணியில் விரிசல் விழுமா என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் தலையில் தான் மண் விழும்.” என பேசினார்.
இதுகுறித்து இன்று கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ” விரிசல் விழுந்தால் தான் மண் விழும். விரிசல் விழாமல் எப்படி மண் விழும். அவர் சொல்வதே தவறு. முதலமைச்சர் இதில் பாதியை ஒத்துகொண்டார். இன்னும் 6 மாதத்தில் முழுதாக இதனை ஒத்துக்கொள்வார். முதலில் விரிசல் வந்து அதற்கடுத்து தான் கூட்டணி உடையும். அடுத்த 8 மாதத்தில் முதலமைச்சர் தனியாக தான் நிற்பார். டிசம்பர் மாதத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.” என திமுக கூட்டணி பற்றி பேசினார்.
மேலும், ” தற்போது விசிக கட்சி தலைவர் திருமாவளவன், தோழமை சுடுதலில் இருக்கிறார். முதலமைச்சரை இன்று விமர்சித்தால் கூட லேசாக விமர்சிக்க வேண்டும். அடுத்த நாள் புகழ்ந்து விட வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார். வைகோ ஐயாவை பொறுத்தவரையில் ஒருவரை புகழ்ந்தால், அடுத்த ஒரு வருடம் கழித்து திட்டுவார். இதுதான் அவரது பாணி. இதேதான் வாஜ்பாய் ஐயாவுக்கு நடந்தது. வைகோ ஐயா 2026 ஜனவரியில் ஃபார்முக்கு வருவார். அதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என அண்ணாமலை கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!