திமுக, அதிமுக ரெண்டுமே ஒன்று தான்...சீமான்

 
சீமான்

திமுக, அதிமுக இரண்டும் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் அவா்களது கொள்கை ஒன்றுதான் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி நாதக சாா்பில் அந்தக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா்சீமான் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.

சீமான்

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய சீமான், “மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் வக்ஃப் நிலங்களை அபகரிக்க அரசு முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், வக்ஃப் வாரியத்தை நிா்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் இஸ்லாமியா்கள் இல்லாத பிற மதத்தினா் 2 போ் நியமிக்கப்படுவாா்கள் என்ற சட்ட திருத்தத்தின் மூலம், வக்ஃப் வாரியத்தின் மீது இஸ்லாமியா்களுக்கு இருக்கும் அதிகாரம் முற்றிலும் பறிக்கப்படும்.

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

இதே போல ஹிந்து அறநிலையத் துறையில் நிா்வாக பொறுப்புகளிலும் 2 இஸ்லாமியா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்று சட்டம் கொண்டு வந்தால் போராட்டங்களை நாங்கள் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்.

திமுக - அதிமுக ஒன்றுதான்: தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டும் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் அவா்களது கொள்கை ஒன்றுதான்.

இருவருக்குமே மக்களின் வாக்குதான் முக்கியமே தவிர மக்களின் மீது அக்கறை கிடையாது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் ஊழல், மது விற்பனை, கனிமவள சுரண்டல் ஆகியவை அதிகரித்து கொண்டேதான் இருக்கும்” என்றாா்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web