திமுக கிளைச்செயலாளர் மின்சாரம் பாய்ந்து பலி... கொடிக்கம்பம் அகற்றும் போது சோகம்!

 
ராமமூர்த்தி

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கேத்துநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. 50 வயதாகும் இவர் கேத்துநாய்க்கன்பட்டி திமுக கிளைச் செயலாளராக பணிபுரிந்து வந்தார்.

திமுக தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து, கேத்துநாயக்கன்பட்டியில் பொது இடத்தில் உள்ள திமுக கொடி கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வந்தனர். திடீரென கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக மின்சாரக் கம்பி மீது சாய்ந்துவிட்டது. 

கிருஷ்ணகிரி

இதில் கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ராமமூர்த்தி, கூலி தொழிலாளி உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ராமமூர்த்தி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்.

 கேத்துநாயக்கன்பட்டி ஆறுமுகம் (58), பெருமாள் (46), முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூபாலன் (50), சர்க்கரை (55) ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திமுக

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த திமுக ஒன்றியச் செயலாளர் குமரேசன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன் நிர்வாகிகள் ஆறுதல் கூறினர். ராமமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?