திமுக தொண்டர்கள் அதிர்ச்சி... பட்ஜெட் நேரடி ஒளிபரப்பில் திரையில் தோன்றிய நாம் தமிழர் சீமான்!
அடுத்த வருடம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ள நிலையில், திமுக அரசு தேர்தலுக்கு முந்தைய தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. இந்த பட்ஜெட் தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் என்பதால், பொதுமக்களுக்கு ஜாக்பாட் தருகிற விஷயங்கள் பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப 100 இடங்களில் பட்ஜெட் உரை மெகா திரையில் ஒளிப்பரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று பட்ஜெட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை பொதுமக்கள் நேரடியாக பார்க்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய எல்இடி திரை வைக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியிலும் பட்ஜெட்டை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக ஒரு எல்இடி திரை வைக்கப்பட்டு இருந்தது. இந்த எல்இடி திரையில் திடீரென சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்களும், திமுக உடன்பிறப்புகளும் அதிர்ச்சியடைந்தனர். சீமான் வீடியோவை ஒளிப்பரப்பிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
