தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு.. தேர்தல் திருவிழா ஆரம்பம்!
திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை இன்று தொடங்கியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPIM) அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. வரும் பிப்ரவரி 26ம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட சிபிஎம், இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைக் கோரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இன்று பிப்ரவரி 22ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) கட்சியுடன் திமுகவின் உயர்நிலைக் குழு தனது முதற்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் 5 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளார். சக்தி நடராஜன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் 1-ஆம் தேதிக்குள் முதற்கட்டத் தொகுதி ஒதுக்கீட்டை இறுதி செய்ய திமுக விரும்புவதால், அடுத்தடுத்த நாட்களில் காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்ட கொமதேக போன்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
