தமிழகம் முழுவதும் மார்ச் 12ம் தேதி திமுக கண்டனப் பொதுக்கூட்டம்!

 
ஸ்டாலின்


 
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12 ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.அதன்படி திருவள்ளூரில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

முதல்வர் ஸ்டாலின்

இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மத்திய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்து கூறும் வகையில்  "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மார்ச் 12 ம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.

.ஸ்டாலின்


அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார். திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web