இன்று முதல்வர் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் !

 
ஸ்டாலின்
 

2026ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அனைத்துஅரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில்  ஆளுங்கட்சியான திமுக முன்கூட்டியே தயாராகி வருகிறது. 

ஸ்டாலின் கடிதம்

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு இருந்தார்.  இது குறித்து வெளியான  செய்திக் குறிப்பில்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்  ஜூன் 28ம் தேதி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. 

ஸ்டாலின்

காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டம் "ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை'' ஆகிய பொருளை மையமாக கொண்டு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது