இரு சக்கர வாகனத்தில் லாரி மோதி உடல் நசுங்கி திமுக நிர்வாகி பலி!

 
விபத்து

சென்னை சூளைமேடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். கட்டிட ஒப்பந்ததாரர். அவரது மகன் மோகன கிருஷ்ணன் (32). கால் டாக்ஸி ஓட்டுநர். திமுக 106-வது வட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு நண்பர் கேசவனுடன் இருசக்கர வாகனத்தில் வடபழனி நோக்கி சென்றார். திருநகர் பேருந்து நிறுத்தம் அருகே 100 அடி சாலையில் லாரியை முந்த முயன்றபோது வாகனம் நிலை தடுமாறியது. இருவரும் கீழே விழுந்தனர். லாரி சக்கரத்தில் சிக்கிய மோகன கிருஷ்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கேசவன் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயமடைந்த கேசவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த மோகன கிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. லாரி ஓட்டுநர் சுதாகர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!