பெண் குளிப்பதை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி.. கையும் களவுமாக கைது செய்த போலீசார்..!!

 
பூபாண்டியன் 

பெண் குளிக்கும் போது வீடியோ எடுத்த திமுக நிர்வாகி பூபாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்...

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பவுண்டு தெருவை சேர்ந்த பூபாண்டியன் என்பவர் நாடார் பஜாரில் டீக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் திமுக மாவட்ட பிரதிநிதியாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பூபாண்டியன் தனது நெருங்கிய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கமுதி: வட்டாச்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நில அளவவை  பிரிவில் தேங்கிக்கிடக்கும் மனுக்கள்; வட்டாட்சியரிடம் இன்று ...

அப்போது பாத்ரூம் செல்வதாகக் கூறி அப்பக்கம் சென்ற போது பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அதை நோட்டமிட்ட பூபாண்டியன் ​​மறைந்து நின்று பெண் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதை பார்த்த அந்த பெண் பூபாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றார். இதையடுத்து அந்த பெண்  கமுதி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் கமுதி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா பூபாண்டியன் போனை ஆய்வு செய்ததில் பெண் அளித்த புகார் உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் திமுக நிர்வாகி பூபாண்டியனை கைது செய்தனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web