சாமி சிலையை கடத்த முயற்சித்த திமுக நிர்வாகி...யாராக இருந்தாலும் விசாரணை நடத்துங்க... அண்ணாமலை ஆவேசம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் அருகே பல நூறாண்டுகள் பழமையான அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் சிலையை திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகி விக்னேஷ் கடத்த முயற்சித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே, பல நூறு ஆண்டுகள் பழமையான அம்மன் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த, திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகி விக்னேஷ் என்ற விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விக்னேஷ் என்பவர், ஓட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகையாவுக்கு நெருக்கமானவர் என்றும், இந்தச் சிலை கடத்தலில், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக, பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

ஆனால், திமுகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே, இந்த சிலை கடத்தல் வழக்கில், திரு. சண்முகையாவிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிறது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும், முறையான விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
