"திமுக ஒரு தீய சக்தி.. வாயிலேயே வடை சுட இது திமுக அல்ல.." ஈரோட்டில் கர்ஜித்த விஜய்! முழு பேச்சு!

 
தவெக விஜய்

ஈரோடு மண்ணில் இன்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில், த.வெ.க. தலைவர் விஜய் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ரோஷமாகப் பேசி அரசியல் களத்தையே அதிர வைத்துள்ளார். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி, விவசாயத்தின் கவசமான காளிங்கராயன் அணை என ஈரோட்டைப் புகழ்ந்து தனது பேச்சைத் தொடங்கிய விஜய், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆளுங்கட்சியான திமுகவை நோக்கி அனல் பறக்கும் வார்த்தைகளை வீசினார். "உங்களை நம்பித் தான் நான் வந்திருக்கிறேன், உங்களிடம் நான் வைத்திருப்பது 30 ஆண்டுகால உறவு; இது சூழ்ச்சிக்காரர்களுக்குத் தெரியாது" என்று உருக்கமாகப் பேசிய விஜய், தன்னை முடக்க நினைப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்தார்."பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு கொள்ளையடிக்காதீர்கள்" என்று திமுகவை நேரடியாகச் சாடிய விஜய், எங்களின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்று தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

விஜய்

"தவெக ஒரு பொருட்டே இல்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்? உங்களிடம் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணம் இருக்கிறது, ஆனால் என்னிடம் இந்த மக்கள் மாஸ் இருக்கிறது" என்று அவர் சவால் விட்டபோது தொண்டர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே எதிர்ப்போம், மற்றவர்களுக்கு எங்களிடம் நேரமில்லை என்று அவர் அதிரடியாகக் கூறினார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு விளாசிய விஜய், "நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்று அடுக்கடுக்காகப் பொய்களைச் சொன்னார்கள்; இன்று வரை எதையாவது செய்தார்களா? அவர்கள் எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான்" என்று கிழித்தெறிந்தார். 24 மணி நேரமும் விஜய்யை எப்படி மடக்கலாம், தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் அவர்கள் அலைகிறார்கள் என்று குற்றம் சாட்டிய அவர், தனிப்பட்ட முறையில் அசிங்கமாகப் பேசுவது தமக்கு வராது என்றும் குறிப்பிட்டார்.

தவெக விஜய்

பேச்சின் உச்சக்கட்டமாக, "நான் எத்தனை நிமிஷம் பேசுகிறேன் என்பதை விட, என்ன விஷயம் பேசுகிறேன் என்று பாருங்கள். வாயிலேயே வடை சுட இது ஒன்றும் திமுக அல்ல... இது தவெக! திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி" என்று அவர் முழங்கியது ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 2026 தேர்தலுக்கு இப்போதே விஜய் ஒரு மிகப்பெரிய போர்க்களத்தைத் தயார் செய்துவிட்டார் என்பது அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!