திமுக தோல்வி பயத்தில் இருந்து வெளியேற இந்தி, நீட் எதிர்ப்பு இவைகளை கையில் எடுக்கிறது... எல்.முருகன் ஆவேசம்!

 
எல் முருகன்
 


 
இன்று ஜூன் 21 சர்வதேச யோகா தினம் . இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை தாம்பரத்தில் தேசிய சித்தா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிகளில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். 

திமுக ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது... எல்.முருகன் ஆவேசம்!
அந்த உரையில் “யோகா என்பது உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் முழுமையான பயிற்சி. இந்தியாவில் தோன்றிய தொன்மையான கலையான யோகா, இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுவது மிகுந்த பெருமையளிக்கிறது. தோல்வி பயத்தால் கீழடி, தொகுதி மறுசீரமைப்பு என திமுக அரசியல் செய்கிறது. 

முருகன்

தோல்வி பயத்தில் இருந்து வெளியேற இந்தி, நீட் எதிர்ப்பு இவைகளை  திமுக கையில் எடுக்கிறது. மக்கள் தெளிவாக இருப்பதால் திமுகவின் செயலுக்கு ஆதரவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனி அமித்ஷாவின் பயணம் தொடர்ச்சியாக இருக்கும். மதுரை மாநாடு நடக்கும் முன்பே லட்சக்கணக்கானவர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர் எனக் கூறியுள்ளார்..

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது