மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது!

 
ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு செயற்குழு எம்.பி.க்கள் கூட்டம்

வரவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. சார்பில் எழுப்பப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் மற்றும் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து வியூகம் வகுப்பதற்காக, தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 29, சனிக்கிழமை) தொடங்கியது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்தக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

திமுக பொதுக்குழு செயற்குழு அறிவாலயம் கூட்டம் ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்ப வேண்டிய தமிழகத்தின் உரிமைகள் மற்றும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயங்கள் பின்வருமாறு:

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டம் குறித்த விவகாரங்களை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டது.

எஸ்.ஐ.ஆர். பணிகள்: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR - Special Intensive Revision) தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் பற்றியும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டாலின்

எம்.பி.க்களின் செயல்பாடுகள்: கடந்த இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எம்.பி.க்களிடம் இருந்து பெறப்படும் பணி அறிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தில் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் உத்திகள் பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலும், எம்.பி.க்களில் சிலர் மாவட்டச் செயலாளர்களாகவும் இருப்பதால், கள நிலவரங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம் கூடுவதையொட்டி, எதிர்க்கட்சிகள் கிளப்ப இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முன்கூட்டியே தி.மு.க. தயாராகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!