காவல் நிலையத்துக்குள் புகுந்து திமுகவினர் ரகளை! அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கு ஜாமீன்!

 
திருச்சி சிவா நேரு

தமிழகத்தில் இம்முறை திமுக ஆட்சி பெறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் திமுகவினர் செய்யும் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. வட்ட செயலாளர் துவங்கி எம்.எல்.ஏ., எம்.பி., வரை மக்களை உதாசீனமாக பேசுவது, பொது மேடையில், ஓசி டிக்கெட் என பெண்களைக் கிண்டல் செய்வது, பஜ்ஜி, போண்டா கடைகளில் காசு தராமல் அடாவடி செய்து என திமுகவினரின் அராஜக போக்கு அவ்வப்போது வீடியோக்களாக வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

நேரு சிவா

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி இறகு பந்து அரங்கம் திறப்பு விழாவுக்கு அமைச்சர் நேரு சென்ற போது அவருக்கு திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்கள் கறுப்புக்கொடி காட்டினர்கள். இது கைகலப்பாக மாறியது. இதனால் கொதித்தெழுந்த அமைச்சர் நேரு ஆதரவாளர்கள், திருச்சி சிவா வீட்டை சூறையாடினர். மேலும் கறுப்புக்கொடி காட்டியதற்காக திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை செஷன்ஸ் கோர்ட் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்கினர்கள். 

நேரு சிவா

இந்த வழக்கில் அந்த நல்லுார் ஒன்றிய சேர்மன்  துரைராஜ், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் காஜா மலை விஜய், முத்துச் செல்வம், ராமதாஸ், கட்சி நிர்வாகி திருப்பதி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.  இவர்கள் 5 பேரும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.  இவர்கள் ஜாமீன் வழங்க கோரி திருச்சி ஜேஎம் 2 கோர்ட்டில் கடந்த 20ம் தேதியும், அடுத்து 23ம் தேதியும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தங்களுக்கு ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தது. மறு உத்தரவு வரும் வரை மதுரையில் தங்கி, தல்லாக்குளம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி பாபு உத்தரவிட்டார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web