திமுக எம்எல்ஏவின் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி... 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

 
சண்முகையா
 

தூத்துக்குடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான திமுக எம்எல்ஏவின் அண்ணனை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் எம்.சி.சண்முகையா. இவரது அண்ணன் அயிரவன்பட்டி முருகேசன். இவர் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்றாலைகளுக்கு இடம் எடுத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இந்த நிலையில் எட்டயபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி மாடத்தி என்பவரின் சுமார் 4.5 ஏக்கர் நிலம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ளது. 

சண்முகையா

இதனை கேட்டு மாடத்தி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து ஆகியோரை முருகேசன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் முத்தையாபுரம் மதிகெட்டான் ஓடை அருகே வந்தபோது, அந்த வழியாக காரில் வந்த முருகேசன், நிலம் தொடர்பாக பேசி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

போலீஸ்

இது குறித்து மாடத்தி அளித்த புகாரின் பேரில், முருகேசன் மீது முத்தையாபுரம் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அயிரவன்பட்டி முருகேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என முருகேசன் கூறியதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நேற்று மதியம் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற நீதிபதி சுமதி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். உடல்நிலை சரியில்லாததால் அவர் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது