இன்று காலை முதல்வா் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
Mar 9, 2025, 06:00 IST

இன்று மார்ச் 9ம் தேதி காலை திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
இது தொடா்பாக திமுக பொதுச் செயலா் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலங்களவை, மக்களவை திமுக உறுப்பினா்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் திமுக எம்பி.,க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்” என்று கூறியுள்ளாா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web