கோயில் விழாவில் திமுக எம்.பி. வாகனம் முற்றுகை… குச்சனூரில் பரபரப்பு!

 
thanga  tamil selvan

தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூ.2.82 கோடி மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறு மண்டபம் கட்டும் பணிக்கான இந்த நிகழ்ச்சி காணொளி வாயிலாக நடந்தது. இதில் தேனி தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது, குச்சனூர் பேரூராட்சியில் அமைக்கப்படும் எரியூட்டு மயானத்திற்கு எதிராக ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் பகுதியில் மயானம் தேவையில்லை என அவர்கள் கோஷம் எழுப்பினர். அதே நேரத்தில் மயானம் அவசியம் என மற்றொரு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கினர்.

இதனால் கோயில் வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் எம்.பி. வாகனத்தை முற்றுகையிட்டதால், தங்க தமிழ்ச்செல்வன் காரிலிருந்து இறங்கி பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து சூழ்நிலை சீரடைந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!