திமுக கொடி கட்டிய கார் மோதி கர்ப்பிணி உட்பட 2 பேர் உடல் நசுங்கி பலி... நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக கொடி கட்டிய கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது சாலையில் சென்ற கர்ப்பிணி பெண் மீது மோதியது. இந்த கோர விபத்தில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் “ திமுக கொடி கட்டிய கார் மோதி கர்ப்பிணி உட்பட இரு உயிர்களை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை” என கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், “திமுககாரன் என்ற போர்வையில் உடன்பிறப்புகள் செய்யும் அராஜகங்கள் அளவின்றி தொடர்கிறது. தாயையும், இளம் சிசுவையும் காவு வாங்கிய திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் .
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
