திமுகவில் ஒன்றியம், நகரங்களைப் பிரிக்க திட்டம்... 40 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு!

திமுகவில் ஒன்றியம், நகரங்களையும் பிரிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு 40 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து 52 மாவட்ட செயலாளர்களையும் அழைத்து கருத்து கேட்டதில் 40 பேர் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை நடைபெற உள்ள நிலையில், திமுகவில் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அவரது ஆலோசனையின்படி, மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்யும் பணி நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி மாதம் வரை திமுகவில் 72 மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில், ஈரோடு மத்தியம், திருப்பூர் மேற்கு, திருப்பூர் தெற்கு, விழுப்புரம் மத்தியம் ஆகிய 4 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. தற்போது திமுகவில் 76 மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாவட்டங்களைப் போல், ஒன்றியம் மற்றும் நகரங்களையும் பிரிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான யோசனையை பென் நிறுவனம் வழங்கியதாக தெரிகிறது.
அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட செயலாளர்களை அழைத்து தனித்தனியாக பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில நிர்வாகிகள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டனர். அதாவது 50,000 ஓட்டுகளுக்கு மேல் உள்ள நகரங்களை பிரிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர்களிடம் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுவரை 52 மாவட்ட செயலாளர்களை அழைத்து கருத்து கேட்டதில், சுமார் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, திமுகவில் ஒன்றியங்கள், நகரங்கள் பிரிக்கப்படுமா? அல்லது தற்போதைய நிலையே தொடருமா? என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும் என்று கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!