ஸ்டாலின் மீது ஊழல் குற்றச்சாட்டு!! ரஃபேல் வாட்ச் பில்!! கிழித்து தொங்க விட்ட அண்ணாமலை!!

 
ரஃபேல் வாட்ச்

திமுக.வினரின் சொத்து பட்டியலை ஆதாரங்களுடன் இன்று காலை வெளியிடப்போவதாக பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் 27 பேரின் சொத்து பட்டியல், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். தாம் வெளியிடும் தகவல்களை தமிழ் மக்கள் புத்தாண்டாக கொண்டாடுவார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

அதன்படி, முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் ஊழல் செய்ததாக புகாரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வருகிறார். முதலில் ரஃபேல் வாட்ச் குறித்த தகவலை அண்ணாமலை வெளியிட்டார்.

ரஃபேல் வாட்ச்

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உள்ள 2 ரபேல் வாட்ச்சில் ஒன்று என்னிடம் உள்ளது. விலையை தாண்டி சிறப்புக்காக தான் இந்த வாட்ச் வைத்துள்ளேன். பெல் அண்ட் ரோஸ் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டது 147 எடிசன் வாட்ச்.

காவல் பணியிலிருந்தபோது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினார்கள். கோவை ஜிம்சன் நிறுவனத்தில் ரஃபேல் வாட்சை வாங்கி கேரளாவைச் சேர்ந்த சேரலாதன் என்பவரிடம் 3 லட்சம் கொடுத்து வாங்கினேன். 

2021 மார்ச்சில் ரஃபேல் வாட்ச் வாங்கிய ராமகிருஷ்ணன் மே மாதம் அதை என்னிடம் கொடுத்தார். எனது வங்கிக்கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் வெளியிடுவேன். வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள், என்று கூறி அதற்கான பில்லை காட்டினார்.

ரஃபேல் வாட்ச்

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன், கலாநிதிமாறன், கே.என்.நேரு, துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டார்.

மேலும் பேசியவர், இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக என் மொத்த வருமான செலவையும் வெளியிடுகிறேன்.அனைத்து கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிட உள்ளேன் அதில் மாற்றம் இல்லை. வேண்டும் என்றால் என்னை மாற்ற சொல்லுங்கள், என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web