நாம் தமிழர் மகளிர் ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் மீது திமுகவினர் மது பாட்டில் வீச்சு! திருவாரூரில் கலவரம்.. திமுகவினர் கைது!

 
காளியம்மாள் நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள்  மீது, திமுகவினர் மது பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியது திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதன் பின்னரும், தொடர்ந்து திருவாரூரில் கூட்டம் நடைப்பெற்றது.

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இம்முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரத்தைக் கண்டு, ஆளுங்கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக என இரண்டு பெரும் கட்சியினருமே பயத்தில் இருந்தது ஈரோடு முழுக்கவே எதிரொலித்தது. சாரை சாரையாக இளைஞர் படை நாம் தமிழர் வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் இறங்கியது அரசியலில் புது எழுச்சி. அதன் பின்னர், தொடர்ச்சியாக திமுகவினருக்கும் - நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே பல இடங்களில் பிரச்சார நேரத்தில் மோதல்கள் ஏற்பட்டது. சில இடங்களில் இரு கட்சியினரும் கடுமையாக தாக்கிக் கொண்டு மண்டை உடைத்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சித்தமல்லியில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் அலாவுதீன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசிக் கொண்டிருந்தார்.

காளியம்மாள்

அப்போது அவர் நாம் தமிழர் கட்சியின் கொள்கை, செயல்பாடு பற்றிய கருத்துகளை கூறினார். மேலும் அவர் ஆளும் திமுக அரசின் செயல்பாடு பற்றி கூறி விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர் திமுகவை விமர்சித்து பேசிக்கொண்டிருந்த நிலையில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் பொதுக்கூட்ட மேடையை நோக்கி மது பாட்டில்களை வீசினர். இதில் சிலவற்றை நாம் தமிழர் கட்சியினர் கையில் எடுத்து காட்டினார். இந்த பாட்டில் வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுளள்து. இருப்பினும், இந்த சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

காளியம்மாள்

அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் துறையினர் மது பாட்டில்களை வீசிய, திமுகவை சேர்ந்த 2 பேரை பிடித்து கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டு பின்னர் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. இது தொடர்பாக பகிரப்பட்டு வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web