தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்கும் தி.மு.க.? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை. விருதுநகரில் விஜய் பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், ராஜ்யசபா சீட் தருவதாக கூறி மறுத்ததால் அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறுவதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடலூரில் 9-ம் தேதி நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது. நடிகர் விஜய்யின் தவெக வருகையால் அரசியல் சூழல் மாறி வருவதாகவும் பேசப்படுகிறது.

இந்த சூழலில், காங்கிரஸ் விலகினால் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு கொண்டு வர தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகள் வழங்க தி.மு.க. ஒப்புக்கொண்டதாகவும், பிரேமலதா மற்றும் விஜய் பிரபாகரன் போட்டியிடும் தொகுதிகளையும் ஒதுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் வெளியேறினால் மிச்சமாகும் தொகுதிகளை மற்ற கூட்டணி கட்சிகளுக்கும், தி.மு.க.க்கும் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
