7 வது முறையாக 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்... முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்!

தமிழகத்தின் தலைநகர் சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வேலுவின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் தேர்தல் நேரத்தில் நாம் என்னென்ன உறுதிமொழிகளை வாக்குறுதிகளை சொல்லி இருக்கிறோமோ, அவற்றையெல்லாம் படிப்படியாக நாம் நிறைவேற்றி வருகிறோம். மீதமுள்ள வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று நான் உங்களுக்கு உறுதி கொடுக்கிறேன். சிலர் பேசும்போது 234 தொகுதிகளில் 220 தொகுதிகளில் வெல்வோம் என்கின்றனர்.
கண்டிப்பாக 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிவெனில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. 1975 ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்து முதலில் குரலில் கொடுத்தவர் நம்முடைய கலைஞர் கருணாநிதி தான். அவசர நிலையை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் போட்ட நிலையில் அடுத்த நொடியே ஆட்சி கலைக்கப்பட்டது.
அதை நினைத்து கவலைப்படவில்லை. இந்த நெருக்கடி நிலைக்குப் பிறகு நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில் கருணாநிதி தலைமையில் 5 முறை ஆட்சி அமைத்தோம். இதைத்தொடர்ந்து 6வது முறையாக என்னுடைய தலைமையில் நீங்கள் ஆட்சியை உருவாக்கி தந்துள்ளீர்கள். 7வது முறையும் இந்த ஆட்சியை தொடர வைப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!