டிசம்பர் 29 ம் தேதி திமுக மகளிர் மாநாடு!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற பெயரில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும். கரூர் மாவட்ட செயலாளர் வி.செந்தில்பாலாஜி வரவேற்புரை ஆற்றுகிறார்.
மகளிர் மேம்பாட்டுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்துப் பயணம், புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடப்படும். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் மாநாடு நடைபெறுகிறது.
கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேற்கு மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாநாட்டின் முடிவில் திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. நன்றியுரை ஆற்றுகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
