"ஹாட் பாக்சில் சுடச்சுட பிரியாணி!" - தஞ்சை மாநாட்டில் திமுக மகளிரணிக்கு தடபுடல் உபசரிப்பு!
தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்று வரும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' மாநாட்டில், திமுக மகளிரணியினருக்கு வழங்கப்பட்ட உபசரிப்பு மற்றும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் 'வெல்லும் தமிழ் பெண்கள்' திமுக மகளிர் மாநாடு, டெல்டா மாவட்டங்களையே அதிர வைத்துள்ளது. சுமார் 1.25 லட்சம் பெண்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில், தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் வசதிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 15 டெல்டா மாவட்டங்களின் 43 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து திமுக மகளிரணியினர் சாரை சாரையாக வந்து குவிந்தனர். மாநாட்டிற்கு வந்த பெண்கள் அனைவரும் திமுகவின் அடையாளமான கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் புடவைகளை அணிந்து வந்திருந்தனர், இது மாநாட்டுப் பந்தலை ஒரு வண்ணக் கடலாக மாற்றியது.

மாநாட்டிற்கு வருகை தந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் மதிய உணவாக ஹாட் பாக்சில் (Hot Box) சுடச்சுட பிரியாணி வழங்கப்பட்டது. பொதுவாகப் பொட்டலங்களாக வழங்கப்படும் உணவுக்குப் பதிலாக, உணவு ஆறாமல் இருப்பதற்காக ஹாட் பாக்சில் வழங்கப்பட்டது பெண்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கெனத் தனியாக உணவு விநியோகக் குழுக்கள் அமைக்கப்பட்டு, எவ்வித நெரிசலுமின்றி அனைவருக்கும் உணவு சென்றடைவதை உறுதி செய்தனர்.
மாநாட்டின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றும் வகையில் 200 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன: 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை, 100 ஏக்கர் பரப்பளவில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்த இடம். குடிதண்ணீர் மற்றும் போதிய எண்ணிக்கையிலான கழிப்பறை வசதிகள். சுமார் 5,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, மகளிரணியை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்கள் தன்னெழுச்சியாகத் திரண்டுள்ள இந்த நிகழ்வு, டெல்டா மண்டலத்தில் திமுகவின் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
