தஞ்சையில் இன்று திமுக மகளிரணி மாநாடு... 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்பு - முதல்வர் ஸ்டாலின் உரை!

 
திமுக மகளிர் ஸ்டாலின் திமுக மகளிர் ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாடு, 2026 தேர்தலுக்கான திமுகவின் மிக முக்கியமான அரசியல் நகர்வாகக் கருதப்படுகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகப் பிரம்மாண்ட பந்தல்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்கட்சிகளின் குற்றசாட்டிற்கு பதிலடி கொடுத்த எம்பி கனிமொழி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த மாநாடு வெறும் கட்சி நிகழ்ச்சியாக மட்டும் பார்க்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஈர்க்கப்பட்டுள்ள பெண் வாக்காளர்களைத் தக்கவைத்துக் கொள்வதும், புதிய பெண் வாக்காளர்களைக் கவர்வதும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

தவெக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தனது பலத்தை இந்த மாநாட்டின் மூலம் நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!