நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ... ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பிரச்சாரம் தீவிரம்!

 
திமுக

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (பிப்.20) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாலை 6.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும் என்று கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளப்படும் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள், தொகுதி அளவிலான பயிற்சியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிப்.23 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ வீடு வீடாகப் பிரசாரத்தை சிறப்பாக நடத்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் பணிகள் வேகமெடுத்து வரும் நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!