திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு இன்றுடன் நிறைவு!
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் கட்சிகள் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக சார்பில் விருப்ப மனு கடந்த பிப். 20 முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் மார்ச் 2ஆம் தேதி வரை மனு ஏற்றும் திட்டம் இருந்தது. நிர்வாகிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அவகாசம் மார்ச் 6 வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது 234 தொகுதிகளில் போட்டியிட சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். திமுக தரப்பில், இன்று மாலை 5 மணி வரை விருப்ப மனு ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
