'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' : திமுகவின் புதிய பிரச்சாரம் இன்று தொடக்கம்!

 
என் வாக்குச்சாவடி திமுக

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தி.மு.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வகுத்துள்ள வியூகத்தின் ஒரு பகுதியாக, "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற புதிய பிரச்சார முன்னெடுப்பு இன்று (டிசம்பர் 10) தொடங்கப்பட உள்ளது.

ஸ்டாலின்

பிரச்சாரத்தின் நோக்கம்:

இந்தத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ள தி.மு.க., ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கட்சி நிர்வாகிகளை உற்சாகத்துடனும் தீவிரத்துடனும் ஈடுபடுத்துவதற்காக இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தச் சூழலை மேலும் பலப்படுத்தும் விதமாக, வீடு வீடாகச் செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

துவக்க நிகழ்வு:

இந்த மாநிலம் தழுவிய பிரச்சாரத்தின் துவக்க நிகழ்வாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தேனாம்பேட்டையில் பகுதிச் செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, வாக்குச்சாவடிகளைப் பலப்படுத்தும் தி.மு.க.வின் பிரசாரம் மாநிலம் முழுவதும் இன்று முதல் சூடுபிடிக்க உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!