டெல்லி கார் குண்டு வெடிப்பில் அடையாளம் தெரியாத 3 உடல் பாகங்களுக்கு டிஎன்ஏ சோதனை!
டெல்லியில் கடந்த 10-ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வெடிப்பில் 15 பேர் பலியானதுடன், 30 பேர் தீவிர காயமடைந்தனர். தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியதாக கருதப்படும் டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேரை தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் டாக்டர்கள் என்பது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் அரியானாவில் உள்ள அல்ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள். ஆரம்பத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இக்கட்டமைப்புக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கியதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்திய விசாரணை அந்தப் பணத்தை பயங்கரவாதிகள் தங்களாகவே திரட்டியதாக வெளிக்கொணர்ந்துள்ளது.

இந்நிலையில், வெடிப்புக்குப் பிறகு கிடைத்த உடல் பாகங்களில் பெரும்பாலானவை அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. ஆனால் தாடை, ஒரு கால் மூட்டு, மற்றும் தலை-கை-கால் இல்லாத முண்டம் என மூன்று உடல் பாகங்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் லோக் நாயக் மருத்துவமனை பிணவறையில் உள்ளன. இவை யாருடையது என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால், இந்த வெடிப்பு வழக்கில் புதிய மர்மம் உருவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
