ஜிவி பிரகாஷ் கண்டனம்!! நரிக்குறவர்கள் திரையரங்குகளில் நுழையத் தடை!!

 
ரோகிணி

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பத்து தல படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவரை உள்ளே விட மறுத்ததாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் ரோகிணி திரையரங்கில் களைகட்டும். ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். இந்த நிலையில் சிம்புவின் பத்துதல படத்தின் முதல்காட்சி இன்று காலை வெளியானது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில், படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கி ஓபில் என் கிருஷ்ணா படத்தை இயக்கியுள்ளார்.   


இந்த நிலையில் ரோகிணி தியேட்டருக்கு படம் பார்க்க வந்த, நரிக்குறவர் சமூகப் பெண்ணை உள்ளே விட ஊழியர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலை தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ண்பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உருக்கத்துடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரோகிணி

இதனிடையே, பத்துதல படத்துக்கு குழந்தைகளுடன் அவர்கள் வந்தார்கள். ஆனால் இது யு/ஏ சான்றிதழ் தணிக்கை குழு வழங்கியிருக்கிறது.  சட்டப்படி 18 வயத்திற்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்க முடியாது அதனால் நாங்கள் அனுமதிக்கவில்லை இதில் சாதிய பாகுபாடு  காட்டப்படுவதாக கூறுவது தவறு, ரோகினி தியேட்டர் உரிமையாளர் தெரிவித்தார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!