போனஸ் பங்குகளை அறிவித்துள்ள இந்த ஷேர் உங்கள் போர்ட்போலியோவில் இருக்கிறதா ?

 
பங்குச்சந்தை


லோதா டெவலப்பர்ஸ் என்று அழைக்கப்பட்ட, மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் லிமிடெட்டின் வாரியம் வலுவான செயல்திறனைக் கவனித்து, பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வெகுமதியாக அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கான தேதியாக மே 31, 2023 புதன்கிழமையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பங்குச்சந்தை
மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் 47,000 கோடிக்கு மேல் சந்தை மூலதனத்தைக் கொண்ட லார்ஜ் கேப் நிறுவனமாகும். நிறுவனம் காலாண்டு முடிவுகள் மற்றும் ஆண்டு முடிவுகளில் அற்புதமான எண்ணிக்கையை கொடுத்துள்ளது. Q4FY23ல், நிகர லாபம் Q4FY22 ஐ விட 38.66 சதவிகிதம் அதிகரித்துள்ளது. FY23ல் முன் விற்பனையானது ரூபாய் 12,064 கோடியாக இருந்தது (ஆண்டுக்கு 34 சதவிகிதம் அதிகம்) மற்றும் Q4FY23ல் ரூபாய் 3,025 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2023 நிதியாண்டில் நிறுவனம் கடன் தொகையை ரூபாய்2,229 கோடி குறைத்து ரூ.7,071 கோடியாக உள்ளது. கூடுதலாக, நிறுவனம் FY23ல் 19, 800 கோடி GDV மதிப்புள்ள 12 புதிய திட்டங்களைச் சேர்த்துள்ளது. இந்நிறுவனம் முதன்மையாக ரியல் எஸ்டேட் மேம்பாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.

பங்குச்சந்தை

MMR (மும்பை பெருநகரப் பகுதி) மற்றும் புனே சந்தைகளில் முன்னிலையில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் இதுவும் ஒன்றாகும்.
நேற்று, வர்த்தகத்தின் முடிவில் 0.51 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கின் விலையானது ரூபாய் 982.40 ஆக உள்ளது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூபாய் 1,191 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்சமாக ரூபாய் 711 ஆகவும் உள்ளது. இந்த பங்கு இன்ட்ராடே அதிகபட்சமாக ரூபாய் 997.05 ஆகவும், குறைந்தபட்சமாக ரூபாய்.974 ஆகவும் இருந்தது.இந்த பங்கு 1 வருடத்தில் 12 சதவிகித வருமானத்தையும், 2 வருடங்களில் 85 சதவிகிதத்திற்கும் மேல் வருமானத்தையும் அளித்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் கண்காணிப்புப் பட்டியலில்  இந்த ரியல் எஸ்டேட் பங்குகளை  வைத்திருந்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web