ரஜினிக்காக 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பிரபல நடிகை - ஏன் தெரியுமா?!

 
ரஜினி

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். எழுபது வயதைக் கடந்த நிலையிலும், தற்போது அவர் 'ஜெயிலர் 2' போன்ற படங்களில் பிஸியாக உள்ளார். ஆனால், ஒரு காலத்தில், மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி ரஜினிகாந்தின் உடல்நலன் சீராக வேண்டும் என்பதற்காக 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஒரு நெகிழ்ச்சியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவியும் ரஜினிகாந்தும் திரையுலகில் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்தனர். இருவரும் சுமார் 20 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.  கடந்த 2011ம் ஆண்டு, நடிகர் ரஜினிகாந்த் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். ரஜினியின் உடல்நிலை சீராக வேண்டும் என்று ஆழமாகப் பிரார்த்தித்த நடிகை ஸ்ரீதேவி, அவர் விரைவில் குணமடைய வேண்டி, ஷீரடி சாய்பாபாவுக்காக தொடர்ந்து ஏழு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

ரஜினி

குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து இந்தியத் திரையுலகையே கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் இந்த இரு முன்னணி நட்சத்திரங்களுக்கிடையே இருந்த இந்த அரிய நட்பு பலரையும் நெகிழச் செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!