இதப் பார்றா!! மணமேடையில் மணமகள் மரணம்!! அடுத்த நொடியே அதிரடி திருமணம்!!

 
ஹீதல்

இளம் வயதிலேயே  திடீர் மாரடைப்பால் உயிரிழப்பது சகஜமாகி வருகிறது. பிரபலங்கள் தொடங்கி சாமானியர் வரை யாரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பு குறைந்தமை என எத்தனையோ வகையான காரணங்கள் சொல்லப்பட்ட போதிலும் கண்முன்னே தான் பெற்ற பிள்ளைகள் உயிரிழப்பதை கண்டு பெற்றோர் துடிதுடித்து விடுகின்றனர். அதே போல் ஒரு சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

5வது திருமணம்


அந்த வகையில் குஜராத்தில் சுபாஷ்நகர் பகுதியில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே மணமகள் திடீரென பலியானார். ஆனாலும் அந்த  சோகத்திலும், மணமகன் வீட்டார் உயிரிழந்த மணமகளின் தங்கையை மணமகளாக்கி விட்டனர். ரத்தோரின் மூத்த மகள் ஹீத்தல். ராணாபாயின் மகன் விஷால். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான  ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், திருமண தினத்தன்று  மணமகளுக்கான திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடத்தப்பட்டு கொண்டிருந்தன. பின்னணி இசையுடன் ஆரவாரமாக உறவினர்கள் உற்சாகத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் இருந்தனர். திடீரென மணமகள் மயங்கி விழுந்தார்.  திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள்  உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஹீதல் சகோதரி

ஆனால்,  அவரை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  திருமண வீடு துக்கவீடாகி விடக் கூடாது. பெரும் சோகத்தின் மத்தியிலும், திருமணம் நின்றுவிடக் கூடாது என மணமகன் வீட்டார் பெண் வீட்டாரிடம் பேசி, பெண்ணின் தங்கையை மணமுடிக்க கலந்து ஆலோசித்தனர். உயிரிழந்த மகளின் உடலை மருத்துவமனையிலேயே வைத்து விட்டு இளையமகளின் திருமணத்தை நடத்தி முடித்தனர். அதன் பிறகு உயிரிழந்த மகளின் உடலை பெற்று மகளுக்கான இறுதிச்சடங்குகளை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியது. அதே நேரத்தில் உயிரிழந்த மகளை அப்படியே விட்டு இளையமகளின் திருமணத்தை நடத்தி முடித்தது சுற்றுவட்டாரப்பகுதியில்  மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web