இதப் பார்றா!! ஹீரோவாகும் விஜய் மகன்?! கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!!

 
சஞ்சய் விஜய்

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் இளையதளபதியாக கொண்டாடப்படும்  நடிகர் விஜய்யின் அடுத்த படம் லியோ. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும், அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் நடிகர் விஜய்யின் மகன் குறித்த புது தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விஜய் . இவர் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக  தகவல்கள் பரவி வருகிறது.

விஜய் மகனுடன்

அவர் இயக்குநராக இருப்பதாகவும் கூறி வந்தனர். இது குறித்த சில சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின. சூரரை போற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. தற்போது சஞ்சய் விஜய் பிரபல இயக்குனரான சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். எழுத்தாளர் நரேனின்  வேட்டை நாய்கள் நாவலில் 2 கதைகளை சுதா கொங்கரா வாங்கியுள்ளார். அதில் ஒரு கதையை படமாக இயக்க விஜய்யின் மகன் சஞ்சய் விஜய்யை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து நடிகர் விஜய் இடமும் அவரிடம் மகனிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.   இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் .

சுதா கொங்கரா
இதுகுறித்து நடிகர் விஜய்யிடம்  இயக்குநர் பேசிய போது சஞ்சய் இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். சஞ்சயிடம் இந்த கதை குறித்து நீங்களே கேட்டுப் பாருங்கள், அவர் சம்மதித்தால் படம் பண்ணுங்கள் என விஜய் கூறிவிட்டார். சுதா கொங்கரா, கண்டிப்பாக சஞ்சயிடம் பேசுகிறேன், அவருக்காக காத்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் தந்தைக்கு போட்டியாக சஞ்சய்யும் விரைவில்  ஹீரோவாக நடிக்கலாம்.  ஆனால் சஞ்சய் உறுதியாக இயக்குநராக வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வத்துடன் இருக்கிறாராம். முன்னதாக மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் சஞ்சய் குறித்து விஜய்யிடம் பேசிய போது அவருக்கும் விஜய் இதே பதில் தான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சுதா கொங்கரா தற்பொழுது பாலிவுட்டில் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து சூரரைப்போற்று படத்தின்  ஹிந்தியை ரீமேக்கை  செய்து வருகிறார். படத்தின் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web