“கேட்குறதுக்கு ஆள் இல்லைன்னு நெனைச்சீங்களா... விஜய் கேட்பான்” - ஈரோட்டில் அனல் பறக்கும் பேச்சு!

 
தவெக விஜய்

ஈரோடு என்றாலே மஞ்சள். அந்த மஞ்சள் தரும் தனி வைப்போடு தனது பேச்சைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளும் திமுக அரசை அடித்துத் துவம்சம் செய்துவிட்டார். எதையுமே செய்யாமல் வெறும் கதைகளை மட்டும் அடித்து விடுவதில் இவர்கள் கில்லாடிகள் என்று கிண்டலடித்த விஜய், வள்ளுவர் கோட்டத்துக்குக் காட்டுகிற அக்கறையை இங்கே மக்கள் வாழ்வாதாரத்தில் காட்டலாமே? இவங்க என்ன கவர்ன்மென்ட் நடத்துறாங்களா இல்லை கண்காட்சி நடத்துறாங்களா என்று மேடையிலேயே எகிறினார். 

தவெக விஜய்

உங்களிடம் கொள்ளையடித்து வைத்திருக்கும் காசுதான் துணை, ஆனால் எனக்கு எல்லையே இல்லாத பாசம் வைத்திருக்கும் இந்த மாஸ் தான் துணை என்று அவர் சொன்னபோது தொண்டர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. அண்ணா, எம்.ஜி.ஆர் எல்லாம் தமிழ்நாட்டின் சொத்து; அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று செம நோஸ்கட் கொடுத்த அவர், டிவி கே ஒரு பொருட்டே இல்லைன்னா அப்புறம் ஏன் சார் கதறுறீங்க? ஏன் புலம்புறீங்க? பயம் இல்லைன்னு சத்தமா பாடிக்கிட்டு, உள்ளுக்குள்ள நடுங்கிட்டுப் போற சின்னப் பசங்க மாதிரி இருக்கு உங்க நிலைமை... மொதல்ல மண்டைல இருக்குற கொண்டையை மறைங்க சார் என்று நக்கலடித்தார்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கியப் பிரச்சினைகளை கையில் எடுத்த விஜய், மஞ்சள் நகரத்திற்கு இந்த அரசு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை என்று குற்றம் சாட்டினார். கரும்பு விலை நிர்ணயப் பிரச்சினை, நெல் கொள்முதல் ஊழல் எனப் பட்டியலிட்ட அவர், பவானி - நொய்யல் - அமராவதி இணைப்புத் திட்டம் என்னாச்சு என்று கேள்வி எழுப்பினார். சொன்ன வாக்குறுதி எண் 103-ஐ நிறைவேற்றினீர்களா? ஆறுகளைச் சுத்தப்படுத்த நிதி ஒதுக்கினீர்களே, அது எங்கே போனது? ஆற்று மணலைச் சரியாகக் கொள்ளையடிக்கத் தெரிந்த உங்களுக்கு, மக்களைக் காக்கத் தெரியவில்லையா என்று ஆவேசமாகப் பேசினார்.

விஜய்

விஜய்யை எப்படி முடக்கலாம் என்று 24 மணி நேரமும் யோசிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், தனிப்பட்ட முறையில் அசிங்கமாகப் பேசுவதுதான் அரசியல்னா அது எனக்கு வராதுன்னு நினைக்காதீங்க... உங்களை விட எனக்கு அது நல்லாவே வரும்! ஆனா அந்தத் தரம் தாழ்ந்த அரசியலை நான் செய்ய விரும்பவில்லை என்று எச்சரித்தார். கடைசியாக ஓசி பஸ் விவகாரத்தைத் தொட்ட அவர், மக்களின் வரிப்பணத்தில் செய்யும் திட்டங்களை எப்படி இலவசம் என்று சொல்லலாம்? ஓசியில் போகிறீர்கள் என்று சொல்லி மக்களை அசிங்கப்படுத்துகிறீர்களே... இதைக் கேட்க ஆள் இல்லை என்று நினைத்தீர்களா? மக்களுக்கு ஒன்று என்றால் இந்த விஜய் வந்து கேட்பான் என்று கர்ஜித்து முடித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!