"ஷு அணிந்து பொங்கல் வைப்பதா?" - முதல்வர் ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் ஆவேசம்!
பொங்கல் திருநாளை வெறும் 'கேளிக்கை' விழாவாக மாற்ற திமுக அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முதலமைச்சர் உள்ளிட்ட திமுகவினர் பாரம்பரியத்தை மீறுவதாகச் சாடியுள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காலணி அணிந்து பொங்கல்: "புனிதமான பொங்கல் பண்டிகையின்போது, அதன் பாரம்பரியத்தை மதிக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் ஷு அணிந்து கொண்டு பொங்கல் வைக்கின்றனர். இது பொங்கல் பண்டிகையின் புனிதத்தன்மையைக் கொச்சைப்படுத்தும் செயலாகும்."

"பொங்கல் என்பது இந்து தர்மத்தின் அடிப்படையில், சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் ஒரு ஆன்மிகப் பெருவிழா. ஆனால், திமுக அரசு இதிலிருந்து ஆன்மிகத்தை அகற்றிவிட்டு, வெறும் கேளிக்கையாகவும், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் போலவும் மாற்றத் துடிக்கிறது."
"உலகம் இயங்க உதவும் சூரியனை வணங்குவதும், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதும் இந்துக்களின் வாழ்வியலோடு கலந்தது. திராவிடர் கழகம் உருவான பிறகு, தமிழர்களுக்கு மதம் இல்லை என்பவர்கள், தங்களுக்கெனப் பண்டிகைகள் இல்லாததால் பொங்கலைத் தங்களது பண்டிகையாக உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்."

முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் "ஜாதி, மத பேதமற்ற திருவிழா" எனக் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன், "இந்தியாவில் எந்தப் பண்டிகைக்கும் ஜாதி, மத பேதம் கிடையாது. ஆனால், ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கலாசாரப் பின்புலம் உண்டு. அதைச் சிதைக்கத் துடிக்கும் சக்திகளுக்குத் தோல்வியே கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
