15 மொழிகளில்.... 25,000 பாடல்கள்... பிரபல பின்னணி பாடகர் மனோவிற்கு டாக்டர் பட்டம்!

 
மனோ

தமிழ் திரையுலகில் பிரபல பிண்ணனி பாடகராக இருந்து வருபவர் மனோ. இவர் தமிழில் மட்டுமல்ல  தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 15 மொழிகளில் பாடல்களை பாடி அசத்தியவர். சுமார் 25000க்கும்  அதிகமான  பாடல்களை பாடி இசையுலகில் முடிசூடா சக்ரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார்.  பன்முக திறமைக்கொண்ட அவர், பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார்.


கமலின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘சிங்காரவேலன்’ படத்தில் நடிகராக அறிமுகமாகி  அதன்பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதோடு ரஜினி, கமல் உட்பட  பல முன்னணி ஹீரோக்களுக்கு தெலுங்கில் டப்பிங்கும் கொடுத்துள்ளார்.  இந்நிலையில் இசையுலகில் சாதனை படைத்த மனோவிற்கு பிரபல வெளிநாட்டு பல்கலை கழகம் ஒன்று, டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

மனோ

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பாடகர் மனோ வெளியிட்டுள்ளார். அதில் 15 இந்திய மொழிகளில் 25000 பாடல்கள், 38 ஆண்டுகள் இசைத் துறையில் சாதனை புரிந்ததற்காக ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக் கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. என் மீது அன்பு செலுத்திய ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!