அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்றவர் கழுத்தை அறுத்து தற்கொலை!

 
நாய்கடி

கோவை அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு சிகிச்சைப் பெற வந்தவர், கழுத்தை அறுத்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (35). இவர் கோவை சித்ரா பகுதியில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள கார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

நாய்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு ராம் சுந்தரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. ஆனால்,  அதற்கான சிகிச்சைகளைப் பெறாமல் ராம் சுந்தர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ராம் சுந்தரின் உடல்நிலை பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வந்திருந்தார். 

அரசு மருத்துவமனையில் ராம் சந்தரைப் பரிசோதனை செய்த மருத்துவர், அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை அறிந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை வெறிநாய் கடி தனி பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது ராம் சந்தர் ரேபிஸ் நோயால் தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று மனவேதனை அடைந்தார்.

இந்நிலையில் மதியம் 2.30 மணியளவில் திடீரென அவர் அங்குள்ள நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து, கண்ணாடி துண்டை எடுத்து தனது கழுத்தை அறுத்து கொண்டார்.

பள்ளி மானவி தற்கொலை

இதனால் சக நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பதற்றம் அடைந்த நிலையில், உடனடியாக மருத்துவரை அழைத்து ராம் சந்தருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?