அலட்சியம் வேண்டாம்... நாய் நக்கியதால் 4 உடல் உறுப்புகள் அகற்றம்... மருத்துவர்கள் எச்சரிக்கை!

 
நாய்

 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மஞ்சித் சங்கா (52) கடந்த ஜூலை மாதம் தனது நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கையில் இருந்த சிறிய காயத்தை நாய் நக்கியது. ஆரம்பத்தில் அது சாதாரணமாக தோன்றியது. ஆனால் சில நாட்களில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

நாய்

மருத்துவ பரிசோதனையில் ரத்த நச்சுத் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதயம் ஆறு முறை நின்று மீண்டும் துடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பல வாரங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிர் பிழைத்தாலும், இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் அகற்றப்பட்டன.

நாய்

தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வரும் அவர், சிறிய காயங்களையும் அலட்சியம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். செல்லப் பிராணிகளின் எச்சிலில் உள்ள கிருமிகள் திறந்த காயங்களில் பட்டால் ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உடல்நல பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!