பெற்றோர்களே உஷார்... சிறுமியை கடித்து குதறிய தெருநாய் ... வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது சோகம்!

 
dog dog

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காங்கேயம் சாலை பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் குடும்பத்தின் சிறுமி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது தெருநாய் திடீரென தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென வந்த நாய் சிறுமியை துரத்தி கடித்ததாக கூறப்படுகிறது.

நாய்

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் நாயை விரட்டினர். பின்னர் காயமடைந்த சிறுமியை உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்லப் பிராணி வளர்ப்பு நாய்

இந்த சம்பவத்தின் போது சிறுமியை நாய் தாக்கும் காட்சிகள் காணொளியாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நாய் கடித்தவுடன் வலியால் சிறுமி தந்தையை அழைத்து அலறும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!