நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்கள் வளர்க்கத் தடை !

 
நாய்
 

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பதற்கு தடை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தடை நாளை (டிசம்பர் 20) முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறி இந்த இன நாய்களை வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடரும் சோகம்... ராட்வீலர் நாய் கடித்து குதறியதில் 4 மாத குழந்தை பரிதாப பலி!  

சமீப காலமாக நாய்கள் தாக்கிய சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிட்புல், ராட்வீலர் போன்ற இனங்கள் ஆக்ரோஷமானவை என்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த இன நாய்களை வளர்ப்பவர்கள் தொடர்ந்து வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதிதாக வாங்கி வளர்ப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

ராட்வீலர்

மேலும், மாநகராட்சி எல்லைக்குள் இந்த இன நாய்களை வளர்ப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறினால் அபராதத்துடன் நாய்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர் பாதுகாப்பை முன்னிட்டு எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பொதுமக்கள் பெரும்பாலும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!