வைரல் வீடியோ.. .நள்ளிரவில் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்களை துரத்தியடித்த தெருநாய்கள்!

 
ரீல்ஸ் எடுத்த இளம்பெண்களை துரத்தியடித்த தெருநாய்கள்

இன்று ஆறுமாத குழந்தை தொடங்கி 60 வயது வரை அனைவரின் கைகளிலும் ஆறாம் விரலாய் செல்போன்கள் முளைத்துவிட்டன. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற பழமொழி போய் கையில் மொபைல் இருக்கும் அனைவருமே கேமராமேன்கள் , யூடியூபர்கள் தான். எந்த நேரமும் ரீல்ஸ் மோகத்தில் இளசுகள் அலைகின்றனர். இதனால் தினசரி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடும் மோகமும் அதிகரித்துவிட்டது.  


தொடக்கத்தில் தங்களின் அன்றாட வாழ்க்கையின் சில பகுதியை பதிவு செய்து வீடியோ வெளியிட்டவர்கள், இன்று அதனை பல்வேறு வகைகளில் முன்னெடுக்க தொடங்கிவிட்டனர்.ஒரு சிலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகிய வீடியோ மற்றும் அதனால் கிடைத்த வருமானத்தின் பெயரில் சுயதொழில் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என அடையாளத்தையும் பெற்றுவிட்டனர்.  
அந்த வகையில், அவ்வப்போது சில எதிர்பாராத சம்பவங்களும் இவ்வாறான தனியார் / தனிநபர் வீடியோ கிரியேட்டர்களுக்கு நிகழும். இந்நிலையில், சாலையில் இரவு நேரத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்களை நாய்கள் துரத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்த  வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web