யூ -ட்யூப் நிறுவனத்தின் சிஇஓ வாக நீல் மோகன் நியமனம்! ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்!

 
நீல் மோகன்

யூ-ட்யூப் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியில் இருந்து விலகியுள்ளார். சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014ம் ஆண்டு முதல் யூ-ட்யூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கூகுளின் ஆரம்பகால ஊழியர்களில் ஒருவராக இருந்தவர் தான் நீல் மோகன். தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்நிலையிலேயே, யூடியூப்-ன் தலைமை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன், புதிய தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீல் மோகன்

தொழில்நுட்ப உலகில் ஜாம்பவானாக திகழும் நீல் மோகன் இந்திய வம்சாவளியை சார்ந்தவர் ஆவார். இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டமும், ஸ்டான்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

நீல் மோகன்

இவர் மார்ச் 2008 முதல் நவம்பர் 2015 வரை கூகுளில் காட்சி மற்றும் வீடியோ விளம்பரங்களின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றினார். இவரை பற்றிய ஒரு சுவாரஷ்யமான தகவலும் உள்ளது. அதாவது, கடந்த 2013ல் மோகனுக்கு ட்விட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மோகனை ட்விட்டரில் சேரவிடாமல் தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் 100 மில்லியன் டாலர்களை (ரூ.827 கோடி) அவருக்கு வழங்கியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?