“உடல் உறுப்புகளை தானம் பண்ணிடுங்க...” உருக்கமாக கடிதம் எழுதி வைத்து பள்ளி மாணவன் தற்கொலை!

”என்னுடைய உடல் உறுப்புகளை தான் பண்ணிடுங்க” என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு 9ம் வகுப்பு மாணவன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பீர்க்கன்காரனை வேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி(47). தாம்பரம் சேலையூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் துப்புரவு பணி செய்து வரும் இவரது மகன் யோஸ்வா(14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்த யோஸ்வா, பள்ளியில் அவ்வப்போது சக மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன் தினம் தனது மகன் யோஸ்வாவைப் பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு கலாவதி பணிக்கு சென்று விட்டார். பள்ளியில் மீண்டும் ஜோஸ்வா தகராறில் ஈடுபட்டதாகவும், ஆசிரியர் ஒருவர் ஜோஸ்வாவைக் கண்டித்ததாகவும் தெரிகிறது. ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த சிறுவன் ஜோஸ்வா, பள்ளியில் இருந்து பாதியிலேயே வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவரது தாய் கலாவதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆசிரியர் யோஸ்வா மீண்டும் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனை தாங்கள் கண்டித்தாகவும் அதற்காக தலைமை ஆசிரியரை பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து இரவு பணியை முடித்துவிட்டு கலாவதி வீட்டிற்கு சென்று வெகு நேரமாக கதவை தட்டியும் யோஸ்வா திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் தனது தாயாரின் புடவையால் யோஸ்வா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக சிறுவனை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
போலீசார் சிறுவன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைபற்றி உள்ளனர். அதில் தான் இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். ஜோஸ்வா குறித்து பள்ளியில் இருந்து அவரது தாய் கலாவதிக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. உண்மையான காரணத்தை போலீசார் மறைத்து வருவதாகவும் அதனால் உண்மையான காரணம் தெரியும் வரை சிறுவன் உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!