சிவன் கோவிலுக்கு ரூபாய் 1,51,00,000 நன்கொடை கொடுத்தார் அம்பானி!

 
அம்பானி

அம்பானி குடும்பத்தினர் பாரம்பரியத்தில் ஆழமாக நங்கூரமிட்டு அனைத்து இந்து பண்டிகைகளையும் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். அதன்படி குடும்பத்தினர் நேற்று சிவராத்திரியை அவர்கள் கொண்டாடினர்.

அதே நேரம், மகாசிவராத்திரியை முன்னிட்டு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன், ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ஆகாஷ் அம்பானி ஆகியோர் குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற  சோம்நாத் கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டனர்.

அம்பானி

அவர்களை கோவில் அறக்கட்டளையின் தலைவர் லஹிரி, செயலாளர் ஸ்ரீ யோகேந்திரபாய் தேசாய் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். முகேஷ் அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் அங்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தனர்.

முகேஷ் அம்பானி சோம்நாத் கோயில் நிர்வாகத்துக்கு ரூ.1.51 கோடி நிதி வழங்கினார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

அம்பானி இதுபோன்று கோடி கணக்கான ரூபாயில் காணிக்கை வழங்குவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் ஆகாஷ் அம்பானி, ராஜஸ்தானின் ராஜ்சமந்தில் உள்ள நத்த்வாராவில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநாத்ஜி கோவிலில் ஜியோ 5ஜி சேவையை தொடங்குவதாக அறிவித்தார். தீபாவளியையொட்டி, அவர் அந்த கோவில் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

அம்பானி

ஆந்திர மாநிலம் திருமலை கோவிலுக்கு முகேஷ் அம்பானி செப்டம்பர் மாதம் 1.5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்குச் சென்று ஒவ்வொரு கோயில் கமிட்டிக்கும் ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web